பல கொலைகளுக்கு பொறுப்பேற்பதில் எப் பிரச்சனையுமில்லை – பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி

37714162 303
37714162 303

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ துதெர்த்தே தனது போதைப்பொருள் எதிர்ப்பு ஒடுக்குமுறையின் கீழ் பல கொலைகளுக்கு பொறுப்பேற்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளார்.

அத்துடன் இதற்காக சிறையில் அடைக்கக் கூடிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திங்கட்கிழமை இரவு தொலைக்காட்சியொன்றில் உரையாற்றும்போதே ரொட்ரிகோ துதெர்த்தே மேற்கண்ட விடயத்தை வெளிப்படுத்தியதுடன், போதைப்பொருள் யுத்தத்தை நிறைவேற்றுவதில் நிகழ்ந்த எந்தவொரு மரணத்திற்கும்  பொறுப்பேற்றப்பதாகவும் கூறினார்.

பிலிப்பைன்ஸில் 1.6 மில்லியன் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்தின் புள்ளிவிவரங்களை மேற்கோளிட்டு துதெர்த்தே குறிப்பிட்டார்.

ரொட்ரிகோ துதெர்த்தேக்கு எதிராக மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் வெகுஜன கொலைகள் போன்ற இரு முறைபாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டத்தரணிகளால் ஆராயப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி ரொட்ரிகோ துதெர்த்தே 2016 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பதவியேற்ற பின்னர் போதைப்பொருள் சந்தேக நபர்கள் கிட்டத்தட்ட 6,000 பேர் கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

எனினும் இறப்பு எண்ணிக்கை மிகப் பெரியது என்று உரிமை கண்காணிப்பாளர்கள் சந்தேகிக்கின்றனர்.