மருதங்கேணி கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு மருத்துவர்கள் நியமிப்பு!

மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு பொது மருத்துவ வல்லுநர் உள்பட 4 மருத்துவர்கள் நியமிக்கபட்டுள்ளனர்.

அத்தோடு 4 தாதிய உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிற்றூழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மருத்துவக் குழு ஒரு வாரம் தொடர்ச்சியாக கடமையாற்றிய பின்னர் மற்றொரு மருத்துவக் குழுவை மாற்றம் செய்யும் சுழற்சிமுறைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் மருதங்கேணி கொரோனா சிகிச்சை நிலையத்தில் 50 பேருக்கு சிகிச்சையளிக்கும் வகையில் படுக்கைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.