இன்று ஆரம்பமான 5000 ரூபா வழங்கும் நடவடிக்கை!

Skarmklippnhn
Skarmklippnhn

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு 5000 ரூபா வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது.

இதற்காக அரசாங்கம் 40 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் மினுவாங்கொடை, திவுலப்பிட்டிய, அத்தனகலை மற்றும் மீரிகம ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 72,345 குடும்பங்களுக்கு இந்த 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜெயரத் இது தொடர்பாக தெரிவிக்கையில், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் இணைப்பு நடவடிக்கையுடன் அந்த கொடுப்பனவை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஏனைய 16 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பொது மக்களுக்கு 2 ஆம் கட்டத்தின் கீழ் இந்த கொடுப்பனவை வழங்குவதற்காக நிதி அமைச்சிடம் மானியம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.