மன்னாரில் பண்டைத் தமிழர்களின்புரதான பொருட்கள் கண்டுபிடிப்பு

obisidan littleglassmtn 1535666121525 w1500
obisidan littleglassmtn 1535666121525 w1500

மன்னாரில் தமிழர்களின் பண்டைக்கால போர் ஆயுதங்கள் உள்ளிட்ட பல தொல்லியல் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பள்ளங்கோட்டை கிராம அலுவலகர் பிரிவில் உள்ள புறண்டிவெளி கிராமத்தில் உள்ள புறண்டி வெளி குளக்கட்டுக்கு அருகாமையில் உள்ள மேட்டு நிலப்பகுதி விவசாய நடவடிக்கைக்காக துப்பரவு பணியில் ஈடுபட்ட போது புரதான பொருட்கள் சில கண்டு பிடிக்கப்பட்டு நானாட்டான் பிரதேச செயலாளர் எஸ்.கிரிஸ்கந்தகுமார் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கண்டு பிடிக்கப்பட்ட பொருட்களின் காலப்பகுதி இன்னும் தெளிவாக அடையளம் காணப்படவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாய நடவடிக்கைக்காக துப்பரவுப்பணியில் ஈடுபட்ட விவசாயிகள் 2 கத்தி வடிவிலான வெட்டும் உபகரணத்தையும், உயிர்ச் சுவடி கவாட்டி கடல் வாழ் உயிரினம் சிற்பி வடிவிலானது மற்றும் இரும்பிலிருத்து எடுக்கப்படும் கழிவு இரும்பு துண்டு உட்பட ஓட்டுத்துண்டுகள் மட்பாண்டப் பொருட்கள் என்பன காணப்பட்டள்ளதையடுத்து பிரதானமாகக் காணப்பட்ட நான்கு பொருட்களையும் மீட்டு குறித்த தினத்தில் நானாட்டான் பிரதேச செயலாளர் எம். சிறிஸ்கந்தகுமாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கத்தி வடிவிலான ஆயுதம் வேட்டை மற்றும் போர் போன்வற்றிற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.

குறித்த பொருட்கள் தொடர்பாக மன்னார் தொல்பொருள் தினைக்களத்திற்கு பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த தினைக்களத்தினர் (19) திங்கட்கிழமை நானாட்டான் பிரதேச செயலகத்தில் குறித்த பொருட்களை பார்வையிட்டுள்ளதுடன் அதை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை மற்றும் குறித்த பொருட்கள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இதே வேளை நானாட்டான் பிரதேச பகுதியில் கடந்த மாதமளவில் பண்டைய கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.