சுமந்திரன் ஆஜர் ஆகாததால் ரஞ்சன் ராமநாயக்க மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு!

Untitled 1 5
Untitled 1 5

நீதிமன்றத்தை அவமதிப்புக்குள்ளாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

குறித்த வழக்கு, சிசிர டி அப்ரூ, விஜித் மலல்கொட மற்றும் ப்ரீதி பத்மன் சூரசேன ஆகியோர் உள்ளடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ரஞ்சன் ராமநாயக்க சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டிய ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகளுக்கு சமூமகளிக்க வேண்டியுள்ளதால், வழக்கை பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனை அடுத்து, குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.