வவுனியாவில் கொரோனா சமூக பரவல் இல்லை – சுகாதார வைத்தியர்கள்

வவுனியா நெடுங்கேணியில் வீதி அதிகார சபையின் வீதி திருத்தப்பணிகளை மேற்கொண்டு வந்த வெளிமாவட்டங்களை சேர்ந்த மூவருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்பான மேலதிக தகவல்களை சுகாதாரத்துறையினர் கோரியுள்ளனர் . எனினும் இது ஒரு சமூகப்பரவல் இல்லை இதனைக் கட்டுப்படுத்த வீதி அபிவிருத்தி திட்டப் பொறியியலாளர்களுக்கு சுகாதார வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாக வீதி அபிவிருத்தி திட்ட பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளார் . 

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில் , 

கடந்த 12 ஆம் திகதி வெளி மாவட்டங்களிலிருந்து வீதி திருத்தப்பணிக்கு வந்த மூவருக்கு தற்போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது . எனினும் இவர்களுக்கான மேலும் ஒரு பரிசோதனை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

தற்போது இது ஒரு சமூகப்பரவல் இல்லை இதனை சமூகப்பரவல் ஆக்கவேண்டாம் . எனவே இதனால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதார வைத்தியர்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். 

எனவே அவர்களுடன் இணைந்து சமூகப்பரவலை கட்டுப்படுத்த வீதி அதிகாரசபையின் அபிவிருத்தி திட்டப்பிரிவினர் மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .