6000 கிலோ கழிவு தேயிலை மீட்பு: இருவர் கைது

download 1 12
download 1 12

கொழும்பிலிருந்து மாத்தளையிலுள்ள மூடப்பட்ட தேயிலைத் தொழிற்சாலை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்ட 6000 கிலோ கழிவுத் தேயிலை புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளிலேயே குறித்த கழிவுத் தேயிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மாத்தளை, அலுவிகாரை – பிரிதெவெல பகுதியில் வைத்து சந்தேகத்திற்கிடமான லொறிகள் இரண்டை நிறுத்தி சோதனைக்கு உட்படுத்திய போதே இந்த ஒருதொகை கழிவுத் தேயிலைகள் அடங்கிய பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த தொகை கழிவுத் தேயிலைகள் நல்ல தேயிலைகளுடன் கலந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்காக மாத்தளைக்கு கொண்டு சென்ற போதே கைப்பற்றப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இதற்கு முன்னரும் இதே குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்