ஊரடங்கு உத்தரவினை மீறிய 71பேர் கைது !

unnamed 5 2
unnamed 5 2

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 71பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த காலப்பகுதியில் 17 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்படி தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 759 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொடந்தும் சட்டம் அமுலில் இருக்கும் எனவும் காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன
மேலும் தெரிவித்துள்ளார்