கிளிநொச்சி கண்டாவளை அபாய வலயம் இல்லை-சுகாதார சேவை அதிகாரி

1 19
1 19

கிளிநொச்சி கண்டாவளை அபாய வலயம் என அடையாளமிடப்படவில்லை. குழப்பமடையாதீர்கள் என பிராந்திய சுகாதார சேவை அதிகாரி தகவல் வழங்கியுள்ளார்.

சில ஊடகங்களில் அபாய வலயங்களிற்குள் கிளிநொச்தி கண்டாவளை பிரதேசமும் உள்ளடங்கியதாக செய்தி வெளியாகியமை தொடர்பில் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் உள்ள பொறுப்பு வாய்ந்த அதிகாரியிடம் வினவியபோது அவர் இத்தகவலை வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்கில் சமூக தொற்றாளர் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், தனிமைப்படுத்தலில் உள்ளவர்களின் மாதிரிகள் முதல் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளது. அதில் தொற்று இல்லை என முடிவுகள் கிடைத்துள்ளது.

தொடர்ந்தும் அவர்கள் தனிமைப்படுத்கலில் உள்ள நிலையில் அடுத்த வாரம் அடுத்த பரிசோதனை இடம்பெற உள்ளது. அதன் முடிவுகளை அடிப்படையாகக்கொண்டே அடுத்த கட்டம் தொடர்பில் தீர்மானிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

ஆயினும் மக்கள் கொரோனா தொற்று தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்த அவர், சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிதல் ஆகியன தொடர்பில் மக்கள் அக்கறை இல்லாது செயற்படுகின்றனர்.

சன நெரிசல், ஒன்றுகூடல்களை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருவோர் தொடர்பிலான தகவல்களை சுகாதார சேவை தரப்பு அல்லகு கிராம சேவகர்கள் ஊடாக வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சமூக தொற்று அடையாளம் காணப்படாத நிலையில் எந்தவொரு பகுதியும் அபாய வலயமாக குறிப்பிடப்படவில்லை. எனவே மக்கள் அச்சமடைய தேவை இல்லை எனவும், பாதுகாப்பான முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடந்துகொள்வதன் ஊடாக மாவட்டத்தில் தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.