பூண்டுலோயா எரோ தோட்ட பகுதியில் ஒருவருக்கும் கொரோனா!

image 987d156304
image 987d156304

கொத்மலை, பூண்டுலோயா எரோ தோட்ட பகுதியில் உள்ள ஒருவருக்கும் கொரோன வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பத்து குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவருடன் தொடர்பை பேணியவர்கள் விபரமும் திரட்டப்பட்டு வருகின்றன.

பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரியும் இவர் அண்மையில் வீடு திரும்பியுள்ளார். சில இடங்களுக்கு சென்று வந்தும் உள்ளார்.

பேரியகொடை கொத்தணி பரவலையடுத்து இவரிடம் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகளை பெறுவதற்கான நடவடிக்கையை சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டிருந்தனர்.

பரிசோதனை முடிவு நேற்று (27) வெளியானது. அதில் வைரஸ் தொற்று உறுதியானது.

இதன்பின்னர் பூண்டுலோயா நகரம் (28) இன்று தற்காலிகமாக மூடப்பட்டு தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு தொற்றுநீக்கம் செய்யப்பட்டது.

பிரதேச சபைத் தலைவர் சுசந்த ஜெயசுந்தர ஆலோசனையின் பிரகாரம் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதேவேளை. கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பல பகுதியிலும் பலரிடம் பீசீஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

கொழும்பில் இருந்து வருபவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் தகவல்களை வழங்கவேண்டும் எனவும்,

வெளியிடங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பிலும் விழிப்பாகவே இருக்கவேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

அத்துடன் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறும் கொத்மலை பிரதேச மக்களிடம் கொத்மலை பிரதேச சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்