மட்டக்களப்பில் பேரூந்தில் பயணித்த ஒருவருக்கு கொரோனா!

மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

அந்த வகையில், மட்டக்களப்பில் கோரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த நபர் கொழும்புக்கு சென்று திரும்பியதாக பொது சுகாதார அதிகாரிகளுக்கு பொது மக்கள் தெரிவித்த தகவலையடுத்து குறித்த நபர் அடையாளம் கண்டு தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு மேற்கொணட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

கொழும்பு பத்தரமுல்லை பகுதியிலுள்ள மீன்சந்தைக்கு சென்று குறித்த கொரோனா தொற்றாளர் பொது பேரூந்து ஊடாக மட்டக்களப்பிற்கு வந்தடைந்துள்ளார் எனவும் அவர் பயணித்த பேரூந்து மற்றும் அதில் பிரயாணம் செய்தவர்கள் தொடர்பாக ஆராயப்படுகின்றது.​