வட்டுவாகல் கடல்நீர் ஏரி வற்றியுள்ளதால் மீனவ குடும்பங்கள் பாதிப்பு!

IMG 1617
IMG 1617

முல்லைத்தீவு வட்டுவாகல் கடல்நீர் ஏரி வறட்சி காரணமாக நீர் வற்றிகாணப்படுவதால் அதனை நம்பி வாழும் ஆயிரம் வரையான கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

வட்டுவாகல் நந்திக்கடலினை நம்பி கடற்தொழில் செய்து வரும் மீனவ குடும்பங்கள் தொழில் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கால நிலைக்கு ஏற்ப சரியான மழைவீழ்ச்சி இதுவரை பதிவாகாத நிலையில் பல நீர் நிலைகள் வற்றிக்காணப்படுகின்றன.

வட்டுவாகல் பாலத்தினை நம்பி பல குடும்பங்கள் நாள்தோறும் மீன்பிடித்தொழில் செய்துவருகின்றார்கள் கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் வட்டுவாகல் பாலத்தடியினை அண்மித்தபகுதியில் நீர் வற்றி சுரியாக காணப்படுகின்றது

இதனால் இதில் உள்ள றால்,மீன் வகைகள் அழிவடைந்துள்ளதுடன் அவற்றினை பிடிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவ குடும்பங்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.