குமார் ஆனந்தன் நீச்சல் தடாகத்தை பராமரிப்பதற்கு, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் -அங்கஜன்

625.500.560.350.160.300.053.800.900.160.90 18 2
625.500.560.350.160.300.053.800.900.160.90 18 2

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் அமைந்துள்ள குமார் ஆனந்தன் நீச்சல் தடாகத்தை பராமரிப்பதற்கு, உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வல்வெட்டித் துறை நகர சபையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த நீச்சல் தடாகம், உரிய பராமரிப்புக்கு உட்படுத்தப்படாத காரணத்தினால் சுமார் 25 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், இதனைப் பராமரிப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, தான் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக, யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

குமார் ஆனந்தன் நீச்சல் தடாகம், 2019 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது

குமார் ஆனந்தன் என அழைக்கப்படும் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன், 1975 ஆம் ஆண்டில், மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்தி சாதனை படைத்தார்.

இதன்படி, பாக்கு நீரிணையை கடந்த இரண்டாவர் வீரர் என்ற ஏழு சாதனையுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருந்தார்

இந்த நிலையில், அவரின் சாதனையை கௌரவிக்கும் வகையில், குறித்த நீச்சம் தடாகம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது