தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதி வழங்க தீர்மானம் – பஷில்

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்குப் பொருட்களைப் பொதி மூலமாக விநியோகிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய வகையில் உலர் உணவுப் பொருட்களை பொதி மூலமாக வழங்கு தொடர்பாகப் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழு கவனம் செலுத்துகிறது.

கடன் தவணைகளுக்குச் சலுகைக்காலம் வழங்குவது தொடர்பாக நேற்றைய தினம் கலந்துரையாடல் இடம் பெற்றது இதன்போது ஒரு வார காலம் முழுமையாக மூடப்பட்ட பகுதிகளுக்கு 5 ஆயிரம் வழங்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் மீண்டும் தோன்றியுள்ள இந்த நேரத்தில், அத்தியாவசிய சேவைகளை கடந்த காலங்களைப் போலவே திறமையாகவும், சரியான முறையில், தொடர்ச்சியாக பராமரிக்கவேண்டும் என பஷில் தெரிவித்துள்ளார்.

முதியவர்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நட வடிக்கைகளையும் எடுக்குமாறும், பொதுமக்களின் உதவி தொகை மற்றும் ஓய்வூதியங்களை அவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்க அரசாங்க முகவர்கள் மற்றும் தபால் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.