அமெரிக்க அதிகாரியின் வருகைக்கு சீனா அதிருப்தியடைவது ஏன்? : எதிர்க்கட்சி கேள்வி!

aedcHesha Vithanage 07062019 SSK CMY
aedcHesha Vithanage 07062019 SSK CMY

அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் எமது நாட்டிற்கு வருகை தந்தமையினால் சீன அதிருப்தி வெளியிடுவதற்கான காரணம் தொடர்பில் ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயத்தின் நோக்கம் என்னவென்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களும் அறியாதுள்ளனர்.

அது மாத்திரமல்ல அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் இலங்கைக்கு வருகை தந்தமை காரணமாக சீன அதிருப்தி வெளியிடுவதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும்.

மிலேனியம் கோப்பரேஷன் உடன்படிக்கை கைச்சாத்திடுவதன் ஊடாக நாடு தாரைவார்க்கப்படும் எனவும் கருத்துகக்களை கூறிவந்தவர்கள் தற்போது நாட்டின் தலைமைத்துவத்திடம் கேள்வி எழுப்ப வேண்டிய நேரம் வந்துள்ளது.

இவ்வாறான நிலைமை ஏற்பட்டால் எதிர்காலத்தில் பாரிய இழப்புகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை நான் இங்கு ஞாபகப்படுத்துகின்றேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.