சட்ட விரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்ட நால்வர் விளக்கமறியலில்…

1603976492 Remand 2
1603976492 Remand 2

குச்சவெளி காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்ட நால்வரை அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று(29) உத்தரவிட்டார்.

ஜாயா நகர், குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 23, 26, 21 மற்று 20 வயதுடைய நால்வரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் புல்மோட்டை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் டையினமையிட் பொருட்களை பாவித்து மீன் பிடியில் ஈடுபட்ட வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு குச்சவெளி காவற்துறையினரிடம் ஒப்படைத்ததாகவும் குச்சவெளி காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களிடம் சட்ட விரோதமான முறையில் பிடித்த 200 கிலோ மீன்களையும் கைப்பற்றியதாகவும் காவற்துறையினரிடம் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை காவற்துறையினர் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்