வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறையை மீண்டும் நடைமுறைக்கு வருகின்றது!

how technology is changing the way people work from home blog header
how technology is changing the way people work from home blog header

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறையை மீண்டும் செயற்படுத்துமாறு மேல் மாகாண மற்றும் ஏனைய பிரதான நகரங்களின் அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விசேடமாக, இந்த வைரஸ் பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கையை ஜனாதிபதி செயலாளர் பீ.பீ.ஜயசுந்தர நேற்று (வியாழக்கிழமை) மாலை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து மே மாதம் வரையில் செயற்படுத்தப்பட்ட ´வீட்டில் இருந்தே வேலை செய்யும் காலத்தினுள் கிடைத்த அனுபவங்களைப் பயன்படுத்தி அத்தியாவசிய மற்றும் வேறு சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு மாற்றுத் திட்டங்களை வகுக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய அனைத்து அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதான செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் பொது மேலாளர்களுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது