ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் இடம் பெற்ற திருமண நிகழ்வு தொடர்பில் காவற்துறையினர் விசாரணை!

marriage e1529297799960
marriage e1529297799960

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நேரத்தில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண நிகழ்வு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பின் முன்னணி ஹோட்டல் ஒன்றில் இந்த திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.

கொழும்பில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் இந்த திருமண வைபவம் நடைபெற்றதாகவும், நிகழ்வுகளை காவற்துறையினர் இடைநிறுத்தியுள்ளதாகவும் காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த திருமண வைபவத்தில் சுமார் 35 விருந்தினர்கள் பங்கேற்றிருந்தனர் என தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணம் முழுவதிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு திருமண வைபவம் நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

திருமண வைபவங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளையும் ரத்து செய்யுமாறு அரசாங்கம் முன்கூட்டியே அறிவித்திருந்தது.