மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியோர் பாதுகாப்பை எதிர்பார்த்து எம்மிடம் வர வேண்டாம்-சுகாதார அமைச்சின் பிரதிப்பணிப்பாளர்

thumb large thumb large fdfs
thumb large thumb large fdfs

மேல் மாகணத்தில் இருந்து எவரும் வெளியேற வேண்டாம் என தொடர்ச்சியாக நாம் வலியுறுத்தியும் ஒரு சிலர் பொறுப்பில்லாது வெளியேறியுள்ளனர்.

இவர்களது செயற்பாடுகள்  கண்டிக்கத்தக்கது என சுகாதார அமைச்சின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தனது கண்டனத்தை தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து வெளியேறியவர்கள் வெளிமாவட்டங்களுக்கு சென்றுள்ளனர்.

இவ்வாறான நபர்கள் எங்கும் நடமாடாது வீடுகளில் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும்  என ஆரம்பத்தில் முன்னெச்சரிக்கை விடுத்ததானது எவரையும் வெளியேற வேண்டும் என்பதற்காகவோ அல்லது சுற்றுலா செல்ல வேண்டும் என்பதற்காகவோ அல்ல.

மேல் மாகாணம் அதிக அச்சுறுத்தலான மாகாணமாக கருதியதன் காரணத்தினால் இங்குள்ள எவரையும் வெளியேற்றக்கூடாது என்பதற்காகவே நாம் அவ்வாறு மூன்று தினங்களுக்கு ஊரடங்கை பிறப்பித்தோம்.

ஆனால் நேற்றைய தினம் பலர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

இவர்கள் பொறுப்பில்லாத நபர்கள் என்றே வெளிப்படையாக கூறுகின்றேன்.

மேல் மாகாணத்தை விட்டு எவரும் வெளியேற வேண்டாம் என நாம் தொடர்ச்சியாக கூறியும் இவர்கள் வெளியேறியுள்ளனர்.

இதற்கு பின்னர் மீண்டும் அவர்கள் மேல் மாகாணத்திற்குள் வந்து தமது பாதுகாப்பை எதிர்பார்த்து  எம்மிடம் வர வேண்டாம்.

நடைமுறை சிக்கல் என்ன என்பதை மக்கள் உணர வேண்டும், இதனையே நாம் தொடர்ச்சியாக கூறி வந்தோம், இங்கிருந்து வேறு பிரதேசங்களுக்கு செல்லும் நபர்கள் வெளி பகுதிகளுக்கும் நோயை பரப்பவே செய்துள்ளனர். இது பொறுப்பில்லாத செயற்பாடாகும் என்றார்.