60 காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று

Photo 2
Photo 2

காவல்துறை விஷேட அதிரடிப்படையினர் உட்பட 60 காவல்த்துறை அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று (31) காலை ஊடகம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் 1100 இற்கு அதிகமான குழுவினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.