அரசியல் கைதிகளை விடுப்பதற்கான அமைச்சரவை பத்திரம் தயார்

mano ganesan
mano ganesan

அரசியல் கைதிகளை விடுப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தற்போதும் தயார் நிலையில் இருப்பதாகவும் சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் அந்த பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, களுதாவளை பொது மைதானத்தில் இன்று (Nov.09) ந​டைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளை விடுவிப்பது ​தொடர்பான அமைச்சரவை பத்திரம் தயார் நிலையில் உள்ளதெனவும், தேர்தல் வந்துவிட்ட காரணத்தால் அதனை பாராளுமன்றத்தில் சமர்பிக்க முடியாதுள்ளது.

எவ்வாறாயினும் சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் நான் அமைச்சராக இருக்கப்போவது உறுதி. அந்த அரசாங்த்தில் மேற்படி அமைச்சரவை பத்திரத்தை சமர்பிக்கவுள்ளேன்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து எதிர்காலத்தில் தமிழ் அமைச்சர் ஒருவரை தெரிவு செய்யவுள்ளோம் என்று தெரிவித்தார்.

தமிழர்களின் வாக்குகளை பெற்றுகொடுத்துவிட்டு தமிழர்களுக்கு உரிய சலுகைகள் கிடைக்காதிருப்பதை வேடிக்கை பார்க்க விரும்பவில்லை. அரசாங்கத்திடம் சண்டையிட்டாவது சலுகையை பெற்றுகொடுப்போம்.

எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தின் சனத்தொகையை பொறுத்தே மாகாணத்துக்கான ஆளுநரை அமைச்சர் சஜித் நியமிப்பார். கிழக்கு மக்கள் இழந்தவைகளை ஈடுசெய்து அவர்களுக்கு சுபீட்சமான வாழ்வாதாரத்தை உருவாக்கிகொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.