கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வு நாளை

001 1
001 1

கரைச்சி பிரதேச சபையினால் அறவிடப்பட்டு வரும் ஆதன வரியினை குறைப்பபது தொடர்பான விசேட அமர்வு நாளை கரைச்சி பிரதேச சபையில் இடம்பெறவுள்ளது.

குறித்த விடயம்  தொடர்பில் கரைச்சி பிரதேச சபையில் தெரிவான சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இருவரின் முயற்சியினாலும், ஏனைய உறுப்பினர்கள் அடங்கலாக 13 பேர் ஒப்பமிட்டு விசேட அமர்வுக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். குறித்த ஒப்பமிடப்பட்ட குறித்த கோரிக்கை கடிதம் கிடைக்கப்பெற்றதை அடுத்து நாளை புதன்கிழமை விசேட அமர்வு இடம்பெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்டம் போரினால் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்பதாலும், மிகவும் வறுமை கோட்டிற்குள் தள்ளப்பட்ட மாவட்டம் என்ற ரீதியிலும் தற்போது கரைச்சி பிரதேச சபையினால் இப்போது நடைமுறையிலுள்ள ஆதன வரி 7 வட்டாரங்களிற்கு 10 வீதமாக அறவிடப்பட்டுவருகின்றது.

குறித்த ஆதன வரியினை மக்கள் செலுத்துவதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையிலும், போரினால் முழுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் இம்மாவட்டத்தில் வாழ்வதனாலும் சபையினால் அறவிடப்படுகின்ற இவ்வாறான வரியானது 2021ம் ஆண்டு பாதீட்டில் 3 தொடக்கம் 5 வீதமாக குறைத்து மக்களின் பொருளாதார சபையிலிருந்து விடுவிக்க சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களான விஸ்வநாதன் வித்தியானந்தன், வேலாயுதம் கஜன் ஆகியோரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.. இவ்வாறான வரியை குறைப்பதன் ஊடாக மக்களை வறுமையிலிருந்து மீட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழியமைத்து கொடுக்கும் என நம்புகின்றோம் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு 13 பிரதேச சபை உறுப்பினர்களின் ஒப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் சபையில் பேசப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்