யாழ் – தமிழகம் விமான சேவை நாளை முதல்

Alliance Air
Alliance Air

அலையன்ஸ் எயார் விமான சேவை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கான சேவையை நாளை ஆரம்பிக்கவுள்ளது.

இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மற்றும் சென்னை ஆகிய விமான நிறுவனங்களுக்கிடையிலான இந்த நிறுனத்தின் விமான சேவை திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இடம்பெறும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

91 102 என்ற இலக்க விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 12.45 மணிக்கு புறப்படவுள்ளது. இந்த விமானம் பிற்பகல் 2.10 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளது.

91 101 என்ற இலக்க விமானம் சென்னையில் இருந்து முற்பகல் 10.35 மணிக்கு புறப்பட்டு நன்பகல் 12.00 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளது.