நாட்டுக்கு மேலும் மருத்துவர்கள் தேவை – ஜீ.எல்.பீரிஸ்

நாட்டுக்கு மேலும் மருத்துவர்கள் தேவை என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதேவேளை மருத்துவக் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்தவும் நாடு முழுவதுமுள்ள மருத்துவமனைகளுக்கு போதிய மருத்துவர்களை உருவாக்க ஒரு பொறிமுறையை விருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

மருத்துவ பீடங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்கவின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இவ்வாண்டு நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர் எண்ணிக்கை 10,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படும் மாணவர் எண்ணிக்கை 371ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 700 மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்கின்றனர். இது ஆசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மோசமான வளர்ச்சியாகும் என்றார்.