கொரோனா தாக்கத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மண்முனை வடக்கு பிரதேச மக்களுக்கு உதவிகள்!

4c67fc9d8e10bfa27167bad2d6d7b61c XL 2
4c67fc9d8e10bfa27167bad2d6d7b61c XL 2

மட்டக்களப்பில் கொரோனா தொற்று காரணமாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மனிதாபிமான உதவிகள் தொடர்ந்தும் மாவட்ட செயலகத்தினால் பெற்றுக் கொடுக்க மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் நடவடிக்கை மேற்கெண்டுள்ளார்.

மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சிணி ஸ்ரீகாந்தின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் தேவைகளுக்கான பரிந்துரை செய்யும் வலைமைப்பான நீயூஅரோ தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினால் சுமார் 70 ஆயிரம் ரூபா பெறுமதியான 50 உலர் உணவுப் பொதிளைக் அரசாங்க அதிபர் கே. கருணாகரனிடம் கையளிக்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தில் இன்று (04) இடம்பெற்றது.

அவுஸ்திரேலிய வன்னிஹோப் அமைப்பின் நிதிப் பங்களிப்பில் இவ்வுலர் உணவுப் பொதிகளை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நோக்குடன் நியூஅரோ அமைப்பின் இணைப்பாளர் திருமதி. உருத்திராதேவி ரவி மற்றும் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் மோகனலதா ஆகியோர் அரசாங்க அதிபர் கருணாகரனிடம் கையளித்தனர்.

கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் வாழ்வாதாரத்தினை இழந்துள்ள குடும்பங்களுக்கும் ஏனைய பிரதேசங்களில் தனிமைப்படுத்தப் பட்டடுள்ளவர்களுக்கும், தொழில் இழந்தோருக்குமான மனிதநேயப் பணிகள் தன்னார்வுத் தொண்டு நிறுவனங்களின் அனுசரணையுடன் மாவட்ட செயலகத்தினால் வழங்கப்பட்டுவருகின்றது.