தவறான செய்திகள் பற்றி இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் விடுக்கும் எச்சரிக்கை!

இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் சமூக வலைத்தளங்களில் இலவச டேட்டாக்களை வழங்குவதாகக் கூறி பரப்பப்படும் போலியான செய்திகள் குறித்து தமக்கு முறைப்பாடுகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை ஆபத்துக்குள்ளாக்கும் இத்தகைய போலியான செய்திகள் குறித்து மேற்படி சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் பொதுமக்களை குறிப்பாக இணையத்தில் கற்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தமது தனிப்பட்ட தகவல்களை வெளியிடவேண்டாம் என இச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறான செய்திகள் மல்வார் வைரஸை உங்களது கைத்தொலைபேசிகளில் நிறுவக்கூடும் என்றும் இதனால் முக்கியமான தரவுகளை இழப்பதுடன் சமூக வலைத்தளக் கணக்குகளை ஹேக் செய்வதும் சாத்தியம் என்றும் அச்சங்கம் மேலும் கூறியுள்ளது.