நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு எதிர் கட்சி ஒழைப்பு வழங்கியதில்லை- ஷெஹான் சேமசிங்க

20180915 082746 1024x783 copy
20180915 082746 1024x783 copy

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு எதிர்க்கட்சியினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பு வழங்கியதில்லை என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கொரோனா வைரஸ் தொற்றை நாட்டிற்குள் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கருத்துக்களை முன்வைத்து வந்த எதிர்க்கட்சியினர், இதுவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதில்லை.

சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சியினர் கொரோனா வைரஸ் தொற்று நாட்டிற்குள் மேலும் பரவலடைய வேண்டும் என்பதையே எதிர்ப்பார்க்கின்றனர்.

உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக பொய்யான கருத்துக்களையே எதிர்த்தரப்பினர் பொதுமக்களிடம் முன்வைத்து வருகின்றனர்” என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க முலும் குறிப்பிட்டுள்ளார்