இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தபட்ட 213 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

Screenshot 2020 11 05 20 17 10 14
Screenshot 2020 11 05 20 17 10 14

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தபட்ட 213 கிலோ கேரளா கஞ்சா மீட்க்பட்டுள்ளதாக பளை காவல் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன .

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை காவற்துறை பிரிவிற்கு உட்பட்ட வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வைத்து குறித்த கஞ்சா  மீட்க்பட்டுள்ளது. கடற்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய பளை காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட காவற்துறை குழுவினரும் கடற்படையினரும் குறித்த விசேட நடவடிக்கையை மேற்க்கொண்டிருந்தனர்.


இதில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 213 கிலோ கஞ்சா கடத்தி வர பயன்படுத்தபட்ட படகு இஞ்சின் அதனை கடத்தி வந்த இருவரும் கைது செய்ய்பட்டுள்ளனர். கைது செய்யபட்ட இருவரில் ஒருவருக்கு மல்லாகம் நீதிவான் மன்றில் கஞ்சா கடத்தல் தொடர்பாக வழக்கு ஒன்று காணப்படுகின்றது எனகாவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.


இது தொடர்பாக பளை காவற்துறை மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருவதுடன் பொருட்களையும் கைது செய்ய்ப்பட்டவர்களையும் இன்றைய தினமே நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பளை காவல் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்தியாவில் இருந்து இவை கொண்டு வரப்பட்டதால் கைது செய்ய்பட்டவர்கள் இருவரும் தொற்று நீக்கிய பின்னர் விசாரணைகள் முன்னெடுக்க்பட்டது அதே போல் சான்று பொருட்களுக்கும் தொற்று நீக்கம்செய்ய்பட்டமை குறிப்பிடத்தக்கது.