ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் 139 பேர் கைது!

20201004 175506 1
20201004 175506 1

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம் 139 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது இதன்போது 18 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும், பிரதி காவல்துறை மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக மொத்தம் 2,532 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,382 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக மொத்தமாக 96 பேர் கைதுசெய்யப்பட்டும் உள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாத பகுதிகளிலும் மக்கள் சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளை அவசியம் கடைபிடித்து செயற்படுமாறும் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.