கிழக்கில் கொரோனா தொற்றாளர்கள் 87 ​பேராக அதிகரிப்பு!

IMG 5483
IMG 5483

கிழக்கு மாகாணத்தில் பேலியகொடை மீன்சந்தை கொத்தனியின் பின்னர் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்கள் அதிகதித்து செல்கின்றுது இதுவரை 87 பேராக உயர்ந்துள்ளது எனவே இந்த தொற்றில் இருந்து உங்களை பாதுகாக்க வேண்டுமாயின் மீண்டும் மீண்டும் எங்களால் தெரிவிக்கப்படுகின்ற அனைத்து விதமான சுகாதார நடைமுறைகளையும் மிகவும் கட்டுக்கோபான நல்ல முறையில் கடைப்பிடிக்கும் வகையில் தான் உங்களை இந்த தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும் என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமலையில் இன்று வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் 7 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 47 நபர்களும் திருகோணமலை மாவட்டத்தில் 13 பேரும், கல்முனை சுகாதார பிராந்தியத்தில் 20 பேர் உட்பட 87 பேர் பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது

நேற்றும் இன்றும் பெற்ற தகவலின் பிரகாரம் ஏறாவூர் பிரதேச செயலகப்பிரிவில் கொழும்பில் இருந்து 13 நாட்களின் பின் திரும்பியவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் புதிதாக ஒருவரும் அதேவேளை செங்கலடியில் வியாபாரம் செய்யும் மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த ஒருவருக்கும் அதேவேளை கோரளைப்பற்று மத்தியில் வழமையாக பேலிய கொட மீன்சந்தை நேரடியக தொடர்புபட்ட ஒருவருக்கும்,

கல்முனை சுகாதார பிராந்தியத்தின் கீழ் உள்ள இறக்காமம் பகுதியில் ஏற்கனவே கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட குடும்ப நபர்கள் இருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தெய்யத்தைகண்டியைச் சேர்ந்த காவல்து​​றை உத்தியோகத்தர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டபோதும் அவர் கடந்த 21ம் திகதி தெய்யத்தகண்டிக்கு வந்து சென்றதுடன் அவரை கிழக்குமாகாணத்தின் இணைத்துள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் 5 வைத்தியசா​​லையில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றப்பட்டுள்ளது இதில் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்​பட்டவர்கள் இந்த வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த அடிப்படையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 94 பேரும், ஈச்சலம்பற்று வைத்தியசாலையில் 6 பேரும், கரடியனாறு வைத்தியசாலையில் 71 பேரும், பதியத்தலாவை வைத்தியசாலையில் 20 பேரும், பாலமுனை வைத்தியசாலையில் 70 பேர் உட்பட 261 பேர் தற்போது பராமரிக்கப்பட்டுவருகின்றனர் .

அதேவேளை பேலியகொடை கொரோனா தொற்று வந்ததன் பிற்பாடு 624 பேரை பராமரித்துள்ளோம் அவர்களில் 361 பேர் சுகமடைந்து வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளோம்

தற்போது நாளுக்கு நாள் ஒன்று இரண்டு என அதிகரித்து செல்கின்றது அதேநேரம் எங்களால் பீ.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு கண்டறியப்பட்டவர்கள் மாத்திரம் அல்ல இதைவிட பல நபர்களும் காணப்படலாம்.

எனவே கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைவரிடமும் வேண்டுவது மீண்டும் மீண்டும் எங்களால் தெரிவிக்கப்படுகின்ற அனைத்துவிதமான சுகாதார நடைமுறைகளையும் மிகவும் கட்டுக்கோபான நல்ல முறையில் கடைப்பிடிக்கும் வகையில் தான் உங்களை இந்த தொற்றில் இருந்து பாதுகாக்கலாம்.

சுகாதார துறையினராலும் காவல்துறையினராலும் மற்றும் முப்படையினர் திணைக்களங்களால் எங்களால் இயலுமான சேவைகளை செய்து வருகின்றோம் என்றாலும் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது அதேவேளை தொற்றுடன் சம்மந்தப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகின்றது ஆகவே எங்களால் அனைவரையும் கண்காணிக்க முடியாது எனவே இயன்றளவுக்கு வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மிக அவசியமான தேவை இருந்தால் மட்டும் செல்லுங்கள் நபர்களுக்கு அண்மையில் நின்று பேசுவதை தவிர்த்து சமூக இடைவெளியையும் தனிநபர் இடைவெளியையும் பின்பற்றுங்கள் முகக்கவசத்தை எந்த நேரமும் அணியவேண்டும் சுகாதார முறையினை வெளியில் மட்டுமல்ல வீட்டிலும் கடைப்பிடிக்கவேண்டும் என்றார்.