அரசாங்கம் கொவிட்-19 பரவலை கட்டுபடுத்தும் செயற்பாடுகளிலிருந்து விலகியுள்ளது குற்றம்சாட்டும் – ஹெக்டர் அப்புஹாமி

avatar
avatar

அரசாங்கம் கொவிட்-19 பரவலை கட்டுபடுத்தும் செயற்பாடுகளிலிருந்து விலகியுள்ளதாக எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது

கொழும்பில் இன்று(06)இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இதனைக் குறிப்பிட்டார்.

கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளிலிருந்து அரசாங்கம் விலகியுள்ளது.

இதனால் உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன.

நவம்பர் மாதம் 2 ஆம் திகதி பொதுஜன பெரமுனவின் நான்கு ஆண்டு நிறைவைக் கொண்டாட வேண்டும்.

அத்துடன் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைகின்றது.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் கொண்டாடுவதற்காகவா? அல்லது எல்.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்துவதற்கா? இவ்வாறு இடம்பெறுகின்றது,இந்த கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்துவது தொடர்பில் தற்போது பரியக் கேள்விகள் எழுந்துள்ளன.

5 அணிகள் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்அவர்கள் விடுதிகளில் தங்கினால் ஏனையோருடன் ஏற்படும் தொடர்பு குறித்தும் ஆராய வேண்டும்.

இந்த தொடரில் பணியாற்றவுள்ள ஏனைய அதிகாரிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்இவை அனைத்தும் வெகுசன ஊடகங்களுடன் இணையும் அது பாரியதொரு அளவாக மாற்றமடையும்.

வெளிநாடுகளில் சில முறைகளைப் பின்பற்றி போட்டிகள் நடாத்தப்படுகின்றனஎனினும் இலங்கையில் அவ்வாறு முறைகளைப் பின்பற்றுவது தொடர்பில் தான் கேள்வி எழுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புகாமி தெரிவித்துள்ளார்.