கொழும்பு மாநகர சபை உத்தியோகத்தர்கள் 85 பேருக்கு கொரோனா!

Cbe Corona updatenews360 2
Cbe Corona updatenews360 2

கொழும்பு மாநகர சபை உத்தியோகத்தர்கள் 85 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, சுகாதார சேவையில் ஈடுபடுவோர், தீயனைப்பு படையினர், மற்றும் கழிவு சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் உத்தியோத்தர்களுக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கழிவுகளை அகற்ற சென்ற நபர்கள் மற்றும் பேலியகொடை மீன் சந்தை ஊழியர்களுக்குபீ.சி.ஆர்பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சென்ற நபர்களுக்குமே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளதாக ரோஸி சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் 15 ஆயிரத்து 543பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த பரிசோதனையில் இரண்டாயிரத்து 284 பேருக்கு, இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொழும்பு மாநகர சபையின் ஊடாக, வழங்கப்படும் சேவைகளில் எந்தவித தடங்கல்களும் ஏற்படாது என கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனாநாயக்க மேலும் கூறியுள்ளார்.