கொரோனா தடுப்பூசி தற்போதைய நிலைமையை முழுமையாக மாற்றக்கூடும்!

அடுத்த வருடம் மார்ச் மாதம் பயன்படுத்தக்கூடிய கொரோனாவிற்கான தடுப்பூசி தற்போதைய கொரோனா பரவல் நிலைமையை முழுமையாக மாற்றக்கூடும் என உலக சுகாதார அமைப்பின் சிரேஸ்ட அதிகாரி புரூஸ் அய்ல்வர்ட் ( Bruce Aylward) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் 194 நாடுகளின் சுகாதார அமைச்சர்களுடன் தொலை காணொளி தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற மாநாட்டின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பைசர் (Pfizer) மற்றும் பயோடெக் (BioNTech) ஆகிய நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி பெரும்பாலும் வெற்றி மட்டத்தில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் சிரேஸ்ட அதிகாரி கூறியுள்ளார்.

குறித்த தடுப்பூசி தொடர்ந்தும் ஆய்வு மட்டத்திலேயே இருப்பதுடன் உலகம் நம்பிக்கை கொள்ளக்கூடிய அளவிலும் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் சிரேஸ்ட்ட அதிகாரி புரூஸ் அய்ல்வர்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.

பைசர் (Pfizer) மற்றும் பயோடெக் (BioNTech) ஆகிய நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 90 சதவீதம் கொரோனா தொற்றாது பாதுகாக்கும் என முதல் ஆய்வில் தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.