அடுத்த வாரம் நியமிக்கப்படவுள்ள புதிய தேர்தல் ஆணைக்குழு!

புதிய தேர்தல் ஆணைக்குழு அடுத்த வாரம் நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 20ஆம் திருத்தச்சட்டத்திற்கு அமைவாக இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளது.

அத்துடன் 19வது அரசியல் திருத்தத்திற்கு அமைய 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஸ்தாபிக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவின் கால எல்லை நாளையுடன் நிறைவடையவுள்ளது.

மூன்று உறுப்பினர்கள் கொண்ட அந்த ஆணைக்குழுவின் தலைவராக மகிந்த தேசப்பிரிய செயற்பட்டு வருகின்றார்.

எவ்வாறாயினும் 20ஆம் திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக அந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.