வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது நடப்பு ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம்!

1523550946 Sri Lanka Parliament prorogued
1523550946 Sri Lanka Parliament prorogued

2020 ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் வாக்கெடுப்பு இன்றி திருத்தங்களுடன் இன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால், 2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை அடுத்து, ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று காலை முதல் முன்னெடுக்கபட்டது.

இதன்படி, ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் நாட்டின் இடைக்கால செலவீனமாக 2 ஆயிரத்து 678 பில்லியன் ரூபா கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த ஒதுக்கீடு சட்டமூலத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன எதிரான கருத்துக்களை முன்வைத்தன.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் என்பன வாக்களிப்பில் இருந்து தவிர்ந்து இருப்பதாகவும் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.