மன்னார் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமெல் நியமனம்!

nandini
nandini

மன்னார் மாவட்ட புதிய அரசாங்க அதிபராக திருமதி.நந்தினி ஸ்ரான்லி டிமெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை தனது கடமையை பொறுப்பேற்கவுள்ளார்.

இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மன்னார் கமநல சேவை திணைக்கள உதவி ஆணையாளராகவும்,

மன்னார் பிரதேச செயலாளராகவும், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகவும், வட மாகாண சபையின் பிரதி பிரதம செயலாளராகவும் கடமையாற்றி உள்ளார்.

யுத்த சூழ்நிலையான கால கட்டத்திலும், திடீர் அனர்த்த பாதிப்புக்கள் மத்தியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரவும் பகலும் அயராது பாடுபட்டார்.

அரச பணிகளுக்கு அப்பால் மனிதநேயத்துடனும் சேவையாற்றினார். அறிவு, ஆளுமை, வல்லமை, நிர்வாக திறமை, நீதி நடுநிலை,

நேர்கொண்ட செயல் திறன், விவேகம், துணிவு கொண்ட ‘வீர பெண்மணியாக’ தனது கடந்த கால பணிகளை மேற்கொண்டார்.

நீண்ட காலத்திற்கு பின்னர் மீண்டும் மன்னார் மாவட்ட மக்களுக்காக பணி செய்யக்கூடிய ஒருவர் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து மன்னார் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.