அரசியல் இலக்குகள் மீதான மோகத்தில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது :சுமந்திரன் எம் பி குற்றச்சாட்டு!

1593846304 suma 2
1593846304 suma 2

அரசியல் இலக்குகள் மீதான மோகத்தில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதிலிருந்து அரசாங்கம் தவறியுள்ளதுஎன தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன்
தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (13)நாடாளுமன்றில் இடம்பெற்ற தொற்றுநோய் காராணமாக நிலவும் அசாதாரண சூழல் குறித்த விசேட ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர்இதனை தெரிவித்துள்ளார்

தொடர்ந்தும் நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் ‘ முதல் அலை பரவிய போது அரசாங்கம் தேர்தலொன்றை நடத்துவதிலேயே கருத்தாய் இருந்ததாகவும், இரண்டாம் அலையின் போது 20 ஆம் திருத்தத்தை நிறைவேற்றுவதில் குறியாய் செயற்பட்டதையும் சுட்டிக் காட்டிய அவர் இவையே நோய்ப் பரவலைத் தடுப்பதில் அரசாங்கம் தவறியமைக்குக் காரணம் எனத் தெரிவித்தார்.

பொதுச் சுகாதார அவசர நிலைமை நீண்ட காலமாக நிலைக்கும் நிலையில் அதைக் கையாள்வதற்கு ஏற்ற சட்ட ஏற்பாடுகளை அரசாங்கம் செய்யத்தவறியிருப்பது அரசாங்கத்தின் பாரிய தவறெனக் கூறிய அவர் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு அறிவித்தல்கள் சட்ட வலுவற்றவை என்பதையும் வெளிப்படுத்தினார்.

கடந்த மார்ச் மாதம் தன்னால் வரையப்பட்டு, பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொதுச் சுகாதார அவசரகாலத் சட்டத்தை அல்லது அதைத் தழுவிய சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென மன்றில் பிரேரித்தார்.

மேலும் பேசிய அவர், “நவம்பர் மாதம் உலகெங்குமுள்ள மக்கள் போரில் மரணித்த தம் மாவீரர்களைக் நினைவேந்தும் காலம். எமது நாட்டிலும் மூன்று தசாப்த யுத்தமொன்று நிகழ்ந்தேறியது.

வட-கிழக்கில் இலங்கை அரசாங்கத்திற்கெதிராக ஆயுதம் ஏந்திப் போராடி மரணித்த தாய்மார்கள், தந்தையர்கள், சகோதர்கள் மற்றும் பிள்ளைகளைக் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.

நவம்பர் மாதத்தில் தான் அவர்கள் இவர்களைக் காலம் காலமாக நினைவேந்தி வருகிறார்கள். ஜே.வி.பியின் தலைவர் ரோகன விஜயவீரவைத் நினைவு கூருவதற்கு அனுமதியிருக்கிறது.

கவலைக்கிடமாக நினைவு கூரலிலும் கூட இந்த நாட்டில் பாகுபாடு காட்டப்படுகிறது. எமது (தமிழ்ப்) பெற்றோர்களுக்கோ இங்கு தம் இறந்த பிள்ளைகளை நினைவு கூரும் உரிமை மறுக்கப்படுகிறது.

இந்த விடயத்தை நான் இந்த ஒத்திவைப்புப் பிரேரணை விவாதத்தில் சுட்டிக்காட்டுவதற்குக் காரணம் உண்டு. கோவிட்-19 ஐக் காரணம் காட்டி காவல்துறை , ஏனைய அதிகாரிகளும் மக்கள் துயிலும் இலங்களுக்குச் செல்வதை இடைமறிக்கத் தயாராவதை நான் அறிகிறேன்.

அரசாங்கத்தை கோவிட்-19 ஐக் காரணம் காட்டி மக்களது நினைவேந்தல் உரிமையைப் பறிக்கக் கூடாதெனக் கேட்டு நிற்கின்றேன்”எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.