ஜோ பைடன் மற்றும் கமலா ஹரிஸிற்கு வாழ்த்து தெரிவித்த சீனா!

image 2 1
image 2 1

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ஜோ பைடன் மற்றும் கமலா ஹரிஸிற்கு சீனா இன்று வெள்ளிக்கிழமை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

முன்பு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாளரான ஜோ பைடனை சீனா வாழ்த்த மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சகம், “அமெரிக்க மக்களின் தேர்வை நாங்கள் மதிக்கிறோம். பைடன் மற்றும் ஹரிஸை நாங்கள் வாழ்த்துகிறோம்”. மேலும், “அமெரிக்க சட்டம் மற்றும் நடைமுறையின் அடிப்படையில் அமெரிக்க தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தப்படும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்” என தெரிவித்துள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனா வாழ்த்த மறுப்பு தெரிவித்தமை தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், அமெரிக்க சட்டம் மற்றும் நடைமுறைகளின் கீழ் முடிவுகள் முடிவு செய்யப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜோ பைடன் மூன்றாவது முறையாக தேர்தலில் கடுமையாக போட்டியிட்டு ட்ரம்பை தோற்கடித்து அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாகியுள்ளார்.