நாட்டில் கழிவு நீரின் மூலம் கொரோனா தொற்று பரவும் அபாயம்!

Wastewater Pretreatment Methods
Wastewater Pretreatment Methods

உலகலாவியரீதியில் கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையில் ஈக்வாடோர் நாட்டில் கழிவு நீரின் மூலம் கொரோனா தொற்று பரவும் அபாயம் நிலவுவதாக தென்னாப்பிரிக்க இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு இதுவரையில் எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று எலிகள் மூலம் பல வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் மனிதர்களுக்கு தொற்றும் அபாயம் உள்ளதாகவும் குறித்த இணையத்தளம் வெளியிட்ட செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டென்மார்க் நாட்டில் மூஸ் வகை மிருகங்களினுள் வைரஸ் தொற்று பரவியதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் ஊடாக இந்த விடயம் தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது