தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் வீசிய கடும் சூறாவளி காரணமாக இதுவரை 53 பேர் பலி!

11052015philiphines
11052015philiphines

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் வீசிய கடும் சூறாவளி காரணமாக இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதோடு 22 பேர் காணாமல் போயுள்ளனர்.

மணிக்கு 130 கிலோ மீற்றர் முதல் 235 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய இந்த புயலுக்கு “வாம்கோ” என பெயரிடப்பட்டுள்ளது.

இதேவேளை மணிலாவில் இருந்து 35 கிலோமீற்றர் தொலைவில் உள்ள புலாக்கன் மற்றும் பம்பங்கா ஆகிய மாகாணங்களிலும் இந்த புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

புயல் காரணமாக மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதால் 30 இலட்சம் பேர் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளனர்.

மேலும் இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 3 இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

பாதுகாப்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை இந்த மாத ஆரம்பத்தில் கோனி என்ற சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கியதில் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் மாத்திரம் பிலிப்பைன்ஸில் 21 முறை சூறாவளி தாக்கியுள்ளதாக வானிலை ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.