வாக்குப்பெட்டிகள் விநியோகம்

polling station
polling station

நாட்டின் 8வது ஜனாதிபதியை தெரவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

வாக்களிப்பு நிலையங்களுக்கு அதிகாரிகளை அனுப்புதல் மற்றும் வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் இன்று காலை முதல் இடம்பெறவுள்ளது.

இதற்காக கொழும்பிலிருந்து சுமார் 2000 உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை தேர்தல் நடவடிக்கைகளுக்காக சுமார் மூன்று இலட்சம் அரச அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 2845 மத்திய நிலையங்கள் ஊடாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டது.

12 ஆயிரத்து 815 வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வாக்களிக்களிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு 1,59,92,096 பேர் தகுதி பெற்றுள்ளனர்.