கொரேனா தொற்றினால் உயிரிப்போரின் இறுதிக் கிரியை விவகாரத்தை அரசாங்கமே பிரச்சினைக்கு உட்படுத்தியது – நா உ சமிந்த விஜேசிறி

chaminde 2
chaminde 2

கொரேனா தொற்றினால் உயிரிப்போரின் இறுதியைக் கிரியைகளை மேற்கொள்ளும் விவகாரத்தை, அரசாங்கமே பிரச்சினைக்கு உட்படுத்தியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை, புதைக்க முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முன்னதாக வழங்கப்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் பின்பற்றியிருந்தால், தற்போது பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், அரசாங்கம் இந்த விடயத்தில் அடிப்படைவாதத்துடன் செயற்படுவதாகவும், இதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை எரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை சுகாதாரத் தரப்பினரே மேற்கொண்டதாகவும், அந்தத் தீர்மானத்தை மாற்ற வேண்டும் எனில் அவர்களே அது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த விடயத்தை அரசியல்வாதிகளின் தேவைக்கு ஏற்ப மாற்ற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பூகோளரீதியில் தொற்று நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் பந்தாடுவதற்கு எவருக்கும் அனுமதி வழங்க முடியாது என இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சுகாதார விடயத்தில் அரசிய்வாதிகள் தலையிட வேண்டிய தேவை கிடையாது விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த நிலையில் நடுநிலையாக செயற்பட்டு, சுகாதாரத் தரப்பினர் பரிந்துரைகளுக்கு அமையவே செயற்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.