கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்!

NW19 2
NW19 2

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதியில் காட்டுயானைகள் மக்கள்
குடியிருப்பு பகுதிகளுக்கு வருகை தந்து சொத்துக்களுக்கு சேதமேற்படுத்தியுள்ளது.

சாய்ந்தமருது வொலிவோரியன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சாய்ந்தமருது- கமநலச் சேவை நிலையத்தின் மதில்களை உடைத்து நாசப்படுத்தியதுடன், அங்கிருந்த மரக்கன்றுகளையும்,காட்டு யானைகள் அழித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இதேவேளை கல்முனை பகுதியில் அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலை அருகில் உள்ள வீடொன்றின் மதிலை உடைத்து அங்கு நடப்பட்டிருந்த சுமார் 50க்கு மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளது.

அது மட்டுமல்லாது இரவு நேரங்களில் யானைகள் கூட்டமாக குடியிருப்பு பகுதிகளுக்கு ஊடுருவுவதால் மக்கள் அச்சத்தோடு வாழ்ந்து வருகிறார்கள்.

அண்மை காலமாக அம்பாறை மாவட்டத்தில் கரையோர பகுதிகளுக்கு காட்டுயானைகள் கூட்டமாகவருகை தந்த வண்ணம் உள்ளன.
இதன் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதுன்