தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்படவுள்ள மகிந்த தேசப்பிரிய

1587362567 mahinda deshapriya 2 1
1587362567 mahinda deshapriya 2 1

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ள மகிந்த தேசப்பிரிய, தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் தலைவராக நியமிக்கப்படலாம் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை தவிர சுயாதீன ஆணைக்குழுக்கள் பலவற்றின் தலைவர் பதவிகளுக்கு தகுதியான பலரை அரசாங்கம் தெரிவு செய்துள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஈவா வனசுந்தர நியமிக்கப்பட உள்ளார்.அரச சேவை ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் டி.ஜே.டி.எஸ். பாலபட்டபெந்தி நியமிக்கப்பட உள்ளார்.

அரச நிதி ஆணைக்குழுவின் தலைவராக அமைச்சரவையின் முன்னாள் செயலாளர் சுமித் அபேசிங்கவும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவும், மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் ஆளுநராக கலாநிதி ஜயத் பாலசூரியவும் நியமிக்கப்பட உள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நியமனங்கள் நாளைய தினம் வழங்கப்படலாம் எனவும் அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.