கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

prima
prima

பிரிமா கோதுமை மாவின் விலை நேற்று (Nov.14) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது.

1 கிலோகிராம் பிரிமா கோதுமை மாவின் விலை 8 ரூபாய் 50 சதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரிமா கோதுமை மாவின் புதிய விலை 104.50 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னர் பிரிமா நிறுவனம் விலை அதிகரிப்பு செய்த போதும், அரசாங்கத்தின் கோரிக்கையை அடுத்து, விலை குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று (Nov.15) நள்ளிரவு முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.