சஜித் அல்லது ரணில் ஜனாதிபதியாவதற்கான சாத்தியம்?

sajith and ranil
sajith and ranil

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் கோத்தாபய ராஜபக்‌ஷ வெற்றி பெறினும் அவர் இரட்டைக் குடியுரிமையுரிமையினை கொண்டிருக்கும் பட்சத்தில் ஐக்கிய தேசிய கட்சியினைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்புக்கள் நிலவுகின்றது.

கோத்தாபயவின் இலங்கைக் குடியுரிமை விவகாரம் பல்வேறு சர்ச்சைகளின் மத்தியில் காணப்படுகின்றமையினால் அவர் ஜனாதிபதியாக தெரிவாவதில் சிக்கல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவளரான சுதந்திரக் கட்சியின் நடிகை கீதா குமாரசிங்க சுவிஸ் – இலங்கை இரட்டை குடியுரிமை உள்ளவராக இருந்தமையினால் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது.

இந்நிலையில் கோத்தபாய தனக்கான அமெரிக்க குடியுரிமையை இல்லாதாக்கியுள்ளார் என நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாது போனால் அவரால் ஜனாதிபதியாக பதவியேற்க முடியாமல் போகும்.

அப்படியான ஒரு நிலை ஏற்படின் இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் இலங்கையின் பிரதமரே நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்பார். அதனடிப்படையில் ரணில் ஜனாதிபதியாவார்.

எவ்வாறாயினும் கோத்தாபாய ராஜபக்‌ஷ தேர்தலில் வெற்றி பெற்று தனது அமெரிக்க பிரஜாவுரிமையினை இரத்தாக்கியமை தொடர்பில் நிரூபிக்காவிட்டால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாவார். அல்லது சஜித் பிரேமதாச வெற்றி பெறும் பட்சத்தில் அவர் ஜனாதிபதியாக பதவியேற்பார்.