கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் மூன்றுநாட்களின் பின்னனர் ஊரடங்கை நீக்க தீர்மானம்!

Curfew 1 720x450 1
Curfew 1 720x450 1

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் மூன்று நாட்கள் அவதானித்து மேலும் கொரனா பரவல் இல்லாவிட்டால் ஊரடங்கினை தளர்த்துவதற்கு தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்தார்.

மூன்று நாட்களின் பின்னர் பரவல் அதிகரித்தால் ஊரடங்கினை நீடிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 76பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 2378 குடும்பங்களுக்கு 10ஆயிரம் ரூபா வீதம் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனைவிட 27554குடும்பங்களுக்கு தொழில் பாதிப்புக்கான 5000ரூபா உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.161மில்லியன் ரூபா கொவிட் நிவாணமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.