வாழைச்சேனையில் 230 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை

01 2 2 2
01 2 2 2

வாழைச்சேனைப் காவற்துறை பிரிவிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலெழுந்தவாரியாக இன்று செவ்வாய்க்கிழமை 230 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளது.

01 7 3
01 7 3

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்ட தொற்று நோயியல் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் வே.குணராஜசேகரம் தலைமையில் வாழைச்சேனைப் காவற்துறை பிரிவிலுள்ள கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் மேலெழுந்தவாரியாக 120 நபர்களுக்கும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் மேலெழுந்தவாரியாக 50 நபர்களுக்கும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் மேலெழுந்தவாரியாக 60 நபர்களுக்குமாக 230 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றது.

01 2 2 1
01 2 2 1

வாழைச்சேனைப் காவற்துறை பிரிவிலுள்ள கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை, ஓட்டமாவடி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தொடர்ச்சியாக பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

01 9 1 1
01 9 1 1

குறித்த பி.சி.ஆர் பரிசோதனைகளில் வைத்தியர்கள், பொதுச் சுகாதார மேற்பார்வை பரிசோதகர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

01 3 1 1
01 3 1 1

வாழைச்சேனை காவற்துறை பிரிவில் தொடராக கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்டு வருவதனால் இன்று செவ்வாய்க்கிழமை மேலெழுந்தவாரியாக மேற்கொள்ளப்பட பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை பெறப்பட்டதை தொடர்ந்து வாழைச்சேனை காவற்துறை பிரிவில் ஊரடங்கு தளர்த்துவது தொடர்பில் வியாழக்கிழமை மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கூட்டப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

01 15
01 15

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் 59 நபர்களும், ஏறாவூர் நகர் பிரதேச செயலகப் பிரிவில் 8 நபர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் 6 நபர்களும், பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் இருவரும், கிரான், வெல்லாவெளி, ஓட்டமாவடி, காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவுகளில் தலா ஒருவருமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தம் 80 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்