இலங்கையில் விபத்துக்களால் வருடாந்தம் 3 ஆயிரம் பேர் உயிரிழப்பு!

ajith2
ajith2

இலங்கையில் தினமும் வீதி விபத்துக்களால் 5 தொடக்கம் 10 பேர் வரை உயிரிழக்கின்றனர் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளரான பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஊடகங்களிடம் நேற்று கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்படி வருடாந்தம் வீதி விபத்துக்களால் 3 ஆயிரம் பேர் மரணிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வீதி விபத்துக்களால் 15 ஆயிரம் பேர் அங்கவீனர்களாகின்றனர் என்றும், 20 ஆயிரம் பேர் காயமடைகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.