அனில் ஜாசிங்கவிற்கு பதவி உயர்வாக மாத்திரம் சுகாதார அமைச்சின் செயலாளர் பதவி வழங்கப்பட்டளது -சுகாதார அமைச்சர்

625.500.560.350.160.300.053.800.900.160.90 18
625.500.560.350.160.300.053.800.900.160.90 18

அனில் ஜாசிங்கவிற்கு பதவி உயர்வாக மாத்திரம் சுகாதார அமைச்சின் செயலாளர் பதவி வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் அமைச்சர் பவித்திரா வன்னி ஆராய்ச்சிஇதனை தெரிவித்துள்ளார் இதேவேளை எதிர்வரும் நாட்களில் நடைபெறும் கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்திற்கு முன்னாள் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் நிபுணர் அனில் ஜாசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய வைத்தியர் ஜயரூவான் பண்டார தனது சுய விருப்பின் பேரிலேயே அந்த பதவியிலிருந்து விலகியதாக அமைச்சர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் பணிப்பாளர் நாயகம் பதவி வெற்றிடமாகியிருந்த போதே வைத்தியர் ஜயரூவான் பண்டார சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றினார்.

ஆனால் தற்போது சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், வைத்தியர் ஜயரூவான் பண்டார சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து தனது சுய விருப்பின் பேரில் விலகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்